தினமலர் 01.10.2010
திட்டக்குடி பேரூராட்சியில் ரூ.46 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்திட்டக்குடி : திட்டக்குடி பேரூராட்சி மன்றக் கூட்டத் தில் 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் ஏற்கப்பட்டது. திட்டக்குடி பேரூராட்சி மாதாந்திரக் கூட் டம் மன்ற வளாகத்தில் நடந்தது. சேர்மன் மன் னன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் கமலி முன்னிலை வகித் தார். செயல் அலுவலர் (பொறுப்பு) ஜோதிமாணிக்கம் வரவேற்றார். கூட்டத்தில் 80 லட்சம் ரூபாயில் நிர்வாக அனுமதி பெற்ற சிறப்பு சாலை திட்டத்தினை செயல்படுத்த தீர்மானிக்கப்பட் டது. அடிப்படை மற்றும் கட்டமைப்பு பணிகளுக்கு 30 லட்ச ரூபாயும், மயான பராமரிப்பிற்கு 12 லட்சம் ரூபாயும், குடிநீர் (இயக்குதலும், பராமரித் தலும்) செலவிற்கு 4 லட்சம் ரூபாயும் மன்ற கூட்டத்தில் ஏற்கப்பட்டது.