தினகரன் 03.04.2013
ரூ 461 கோடி சொத்துவரி வசூல்
சென்னை, : சென்னை மாநகராட் சிக்கு உட்பட்ட பகுதியில் இந்த ஆண்டு ரூ 500 கோடி சொத்துவரி வசூலிக்க இலக்கு நிர்ணயித்தது. 15 மண்டலங்களிலும் வரி பாக்கியை வசூலிக்க உதவி வருவாய் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணி நடைபெற்று வந்தது. இது கடந்த 31ம் தேதியுடன் முடிந்தது. ரூ 461.1 கோடிக்கு சொத்துவரி வசூல் ஆகியுள்ளது. இது 92 சதவீத வரி வசூல் ஆகும்.
அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் (மண்டலம் 9)ரூ 103 கோடியும் குறைந்த பட்சமாக மணலியில் (மண்டலம் 2) ரூ 2.86 கோடியும் வசூலானது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. வரி செலுத்தாதவர்களின் வீடுகள் மற்றும் கட்டிடங்களில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டது.