மாலை மலர் 28.07.2010
464
சிறப்பு வகை மின் விளக்குகளால் ஒளி வெள்ளத்தில் மிதக்கும் கடற்கரை நேப்பியர் பாலம்; மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்சென்னை
, ஜூலை. 28- உலகிலேயே 2-வது நீளமான கடற்கரையான மெரீனாவில் ரூ.26 கோடி செலவில் அழகிய பூங்கா, நடை பாதை அமைக்கப்பட்டு தற்போது புதுபொலிவுடன் திகழ்கிறது.இதற்கு மேலும் எழில் சேர்க்கும் வகையில் நேப்பியர் பாலத்தை மின் விளக்குகளால் அலங்கரித்து மக்களை கவரும் வகையில் மேலும் அழகு படுத்தப்படும் என்று துணை முதல்
–அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.அதன்படி ஆஸ்திரேலிய நாட்டு சிட்னி பாலம் போல் நேப்பியர் பாலத்தை அழகு படுத்தும் பணி நடந்து வந்தது
.வெளிநாட்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி
464 சிறப்பு வகை மின் விளக்குகள் நேப்பியர் பாலத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இதற்காக ரூ.1 கோடியே 62 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.தேவைக்கேற்ப ஒளியின் தன்மையை கட்டுப்படுத்தி பிரகாசிக்கும் வகையில் இந்தவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன
. பாலத்தின் வெளிப்புற, உட்புற பகுதி, விளிம்பு, அடிப்பகுதி, வாகனம் செல்லும் பகுதி, நடைபாதை ஆகிய 6 இடங்களில் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.இரவு நேரத்தில் பாலம் தண்ணீரில் மிதப்பது போல் காட்சி அளிப்பதோடு பாலத்தின் முழு வடிவமும் தண்ணீரிலும் தெரியும்
. வாகனம் ஓட்டுபவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி விளக்கு வெளிச்சம் அமைக்கப்பட்டுள்ளது.பாலத்தின் மேலே மல்டிகலரிலும்
, கீழே புளூ கலரிலும் வெளிச்சம் தெரிகிறது.இந்தியாவில் வேறு எங்கும் இது போல் இல்லை
. ஒளி வெள்ளத்தில் மிதக்கும் நேப்பியர் பாலத்தை பொதுமக்கள் பலர் வியப்புடன் பார்த்து செல்கிறார்கள். நேப்பியர் பாலத்தில் சிறப்பு வகை அலங்கார மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளதை இன்று இரவு 8 மணிக்கு துணை முதல்–அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேயர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி கமிஷனர் ராகேஷ் லக்கானி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.1869-
ம் ஆண்டு சென்னை ஆளுனராக இருந்த நேப்பியர் இந்த பாலத்தை வடிவமைத்து கட்டினார். கூவத்துக்கு நடுவில் அமைந்துள்ள இந்த பாலத்தை கடந்த 2000-ம் ஆண்டில் மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் விரிவுபடுத்தி நடைபாதை வசதியுடன் கட்டினார். சென்னைக்கு பெருமை சேர்க்கும் வகையில் இப்போது பாலம் மேலும் அழகு படுத்தப்பட்டுள்ளது.