தினமணி 15.04.2013
சென்னையில் தினமும் 4,789 மெட்ரிக் டன் குப்பை அகற்றம்
தினமணி 15.04.2013
சென்னையில் தினமும் 4,789 மெட்ரிக் டன் குப்பை அகற்றம்
சென்னையில் நாளொன்றுக்கு 4 ஆயிரத்து 789 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருவதாக மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில், இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படும்
குப்பை அகற்றும் பணிகளை மேயர் துரைசாமி மற்றும் மாநகராட்சி ஆணையர் விக்ரம்
கபூர் ஆகியோர் சனிக்கிழமை (ஏப்.13) இரவு ஆய்வு செய்தனர்.
இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்தி:
நகரின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குப்பை அகற்றும் பணிகளை மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சென்னையில் நாளொன்றுக்கு சராசரியாக, பகலில் 3,266 மெட்ரிக் டன்
குப்பைகளும், இரவில் 1523 மெட்ரிக் டன் குப்பைகளும் அகற்றப்பட்டு
வருகின்றன. இப்பணிகளுக்காக 9,537 நிரந்தர துப்பரவுப் பணியாளர்களும், 570
தாற்காலிகப் பணியாளர்களும், 6,806 ஒப்பந்தப் பணியாளர்களும்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
நகரைத் தூய்மையாக பராமரிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மேயர் தெரிவித்துள்ளார்.