தினமலர் 18.11.2017
48.74 கி.மீ., ரோடுகளை சீரமைக்க ஒதுக்கீடு ரூ. 21.77 கோடி மாநகராட்சியின் 41 வார்டுகள் புறக்கணிப்பு

மதுரை, மதுரை நகரில் பெரும்பாலான ரோடுகள் சேதமடைந்த நிலையில் 48.74 கி.மீ., ரோடுகளை மட்டும்
சீரமைக்க, நகர்புற சாலைகள்மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 21.77 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நகரில் 1,500 கி.மீ.,க்கு சாலைகளை மாநகராட்சி
பராமரிக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன் 90 கி.மீ.,க்கு ரோடுகள்
அவசர கதியாக சீரமைக்கப்பட்டன.பெரும்பாலான ரோடுகள் அனைத்தும் 5 முதல் 10
ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டவை.இன்று குண்டும்,குழியுமாக உள்ளன. தொடர்
மழையால் ரோடுகளில் மெகா பள்ளங்கள் உருவாகின.ரோடு சீரமைப்புக்குஉள்ளாட்சி
பிரதிநிதிகளுக்கு ‘கட்டிங்’ கொடுக்கும் நடைமுறை இருந்ததால் ரோடு
பராமரிப்புக்கான நிதி 20முதல் 35 சதவீதம் வரைவீணடிக்கப்பட்டது.தற்போது
உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையில், ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள 21 கோடி ரூபாயில் தரமான தார் மற்றும் பேவர்பிளாக் ரோடுகள்அமைக்கப்பட உள்ளது.
85, 87 – 89, 90-93, 100 ஆகிய வார்டுகளில்குறிப்பிட்ட ரோடுகள் தேர்வு
செய்யப்பட்டுள்ன.இதன்படி 59 வார்டுகளில் இப்பணி நடைபெறும். மீதமுள்ள41
வார்டுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
நகரில் மிகவும் சேதமடைந்துள்ள ரோடுகள்அனைத்தும் தற்போதுமாநகராட்சியின் பொது
நிதியில்’ஒட்டுவேலை’ பார்க்கப்பட்டு வருகிறது.நகர்புற சாலைகள்மேம்பாட்டு
திட்டத்தில் சீரமைக்கப்பட உள்ள ரோடுகள் மிகவும் பாழ் பட்டுள்ளன.அதனால்
இவற்றிற்கு தற்போது முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளன. இந்த ரோடுகளுக்கான
டெண்டர் டிச., 12 ல் நடைபெற உள்ளது. மழைக்காலம் முடிந்த பின் ஜன.,
முதல்ரோடுகள் அமைக்கப்படும்.மற்ற ரோடுகளை மேம்படுத்துவதற்கு மேலும்சில
திட்டங்களில்நிதி ஒதுக்கீடுபெற முயற்சி எடுக்கப்பட்டுள்ளது,என்றனர்.