தினமணி 28.11.2013
வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு சீல்
தினமணி 28.11.2013
வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு சீல்
கோவையில் வாடகை செலுத்த தவறிய ஐந்து கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரியில்லாத
இனங்களின் கீழ் ஒதுக்கீடு பெற்ற மாநகராட்சி வணிக வளாக கடைகளுக்கு தொடர்ந்து
வாடகை செலுத்தாத கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர்
க.லதா எச்சரித்திருந்தார்.
அதன்படி, மாநகராட்சிக்கு தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு வாடகை செலுத்தாத
கடை உரிமைதாரர்களுக்கு அறிவிப்பு அனுப்பியும் வாடகை நிலுவை தொகையினை
செலுத்தாத 5 கடைகளுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.
மாநகராட்சி வணிக வளாகத்தில் செயல்படும் கடைகளுக்குச் செலுத்த வேண்டிய
வாடகை நிலுவைத் தொகையினை உடனடியாகச் செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைக்கும்
நடவடிக்கைகளில் இருந்து தவிர்த்துக் கொள்ளலாம் என ஆணையர்
எச்சரித்துள்ளார்.