தினமலர் 08.04.2010
5 லிட்டர் கெரஸின் வழங்க உத்தரவு
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் மாவட்ட தலைநகரம், நகராட்சி, டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் நடப்பு ஏப்ரல் மாதத்துக்கு மட்டும் புதிதாக வழங்கப்பட்டுள்ள ரேஷன் கார்டுகளில் சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பு இல்லாத குடும்பத்துக்கு ஐந்து லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அங்காடிகளில் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களை தவிர நகர்புற பகுதிகளில் வசிக்கும் காஸ் சிலிண்டர் இணைப்பு இல்லாத ரேஷன்கார்டுதாரர்கள் மட்டும் ஐந்து லிட்டர் மண்ணெண்ணெய் பெற்று பயன்பெறலாம்.ஏனைய ஒரு காஸ் சிலிண்டர் இணைப்பு உள்ள நகர்புறங்களில் புதிதாக வழங்கப்பட்டுள்ள ரேஷன்கார்டுதாரர்களுக்கும், ஒரு காஸ் சிலிண்டர் இணைப்பு உள்ள மற்றும் இணைப்பு இல்லாத கிராமப்புறங்களில் புதிதாக ரேஷன்கார்டு பெற்றவர்களுக்கும் தலா மூன்று லிட்டர் மண்ணெண்ணெய் மட்டும் வழங்கப்படும், என டி.ஆர்.ஓ., கருணாகரன் தெரிவித்தார