தினமணி 29.04.2010
ஒசூர் புதிய பஸ் நிலைய கடைகளுக்கு 5-ம் கட்ட ஏலம்
ஒசூர், ஏப்.28: ஒசூர் புதிய பஸ் நிலையக் கடைகளுக்கான 5-ம் கட்ட ஏலம் ஒசூர் சார்–ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
சென்னை நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குநர் சந்திரசேகரன், ஒசூர் நகராட்சி ஆணையர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 7-ஆம் எண் கடை ரூ.35,500-க்கு ஏலம் போனது. 2-ம் எண் கடை ரூ.19,000, 2-வது ஓட்டல் ரூ.34,000 ஏலம் போனது.
பின்னர் கூடுதல் இயக்குநர் சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறியது: மே 15-ம் தேதிக்குள் புதிய பஸ் நிலையப் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிடும். பிறகு முதல்வர், துணை முதல்வர் தேதி கிடைத்தவுடன் திறப்பு விழா நடைபெறும் என்றார்.