தினமலர் 05.05.2010
புதிய ரேஷன் கார்டுகளுக்கு 5 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கல்: கலெக்டர்
பெரம்பலூர்: ‘பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்து பகுதியில் காஸ் இணைப்பு இல்லாத புதிய ரேஷன் கார்டுதாரரு க்கு இம்மாதம் தலா ஐந்து லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படும்‘ என கலெக்டர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:பெரம்பலூர் மாவட்டத்தில் 2006ம் ஆண்டுக்கு பிறகு பெறப்பட்ட புதிய விடுபட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு காஸ் இணைப்பு இல்லாமல் இருந்தால் மாதம் ஒன்றுக்கு மூன்று லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு மே மாதம் மட்டும் பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர், பூலாம்பாடி, லப்பைக்குடிக்காடு, அரும்பாவூர் ஆகிய டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள காஸ் இணைப்பு இல்லாத ரேஷன் கார்டுக்கு மேலும் இரண்டு லிட்டர் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி இம்மாதம் மட்டும் ஐந்து லிட்டம் மண்ணெண்ணெய் வழங்கப்படும். மேற்கண்ட நகரப்பகுதிகள் நீங்கலாக மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் எரிவாயு இணைப்பு இல்லாத மற்றும் ஒரு காஸ் இணைப்பு உள்ள புதிதாக வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகளுக்கு மூன்று லிட்டர் மட்டும் மண்ணெண்ணெய் வழங்கப்படும். இம்மாதத்தில் ஏற்கனவே மூன்று லிட்டர் மண்ணெண்ணெய் பெற்றிருந்தால் அதிகப்படியான இரண்டு லிட்டர் மண்ணெண்ணெய் கார்டுகளுக்கு வழங்க வேண்டும் என்று ரேஷன் கடை சேல்ஸ்மேன்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கூடுதல் மண்ணெண்ணெய் பெற்று பயனடையலாம்.