தினகரன் 21.06.2010
ஆக்கிரமித்து கட்டிய வழிபாட்டு தலங்கள் 5வது நாளாக அகற்றம்
திருச்சி, ஜூன் 21: திருச்சி மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் 5வது நாளாக நேற்றும் இடித்து அகற்றப்பட்டன.
திருச்சி மாநகர சாலைகளை சர்வதேச தரத்திற்கு இணையாக உயர்த்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு இடை யூறாக சாலையோரங்களில் உள்ள கோயில்கள் மற்றும் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
கீழ புலிவார்ரோடு, கே.கே.நகர், பாலக்கரை, தெப்பக்குளம், பெரியமிளகுபாறை கோரிமேடு பகுதிகளை தொடர்ந்து தென்னூர் அண்ணாநகர் பகுதியில் இருந்த ஆஞ்சநேயர் கோயி லை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று பொக்ளின் கொண்டு இடித்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். அண்ணாநகர் விசுவநாதபுரத்தில் இருந்த பிள்ளையார் கோயிலையும் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர்.