தினமலர் 30.09.2010
சிவகாசியில் ரோடு போட ரூ.5 கோடி
சிவகாசி : நகராட்சிகளுக்கான சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் சிவகாசி நகராட்சியில் 11 கி.மீட்டர் ரோடு அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.சிவன் சன்னதி தெரு, நாவட்டித் தெரு, கிழக்கு தரவீதி, விஸ்வநத்தம் ரோடு, முண்டகன் ரோடு, சோலை காலனி, காத்தான் தெரு, முஸ்லிம் வடக்கு தெரு, நேசனல் காலனி ஆகியவற்றில் சிமென்ட் ரோடும், சி.என்.அண்ணாத்துரை ரோடு, ஞானகிரிரோடு, காமாக்ரோடு, பி.கே.என்.ரோடு, வடக்கு ரதவீதி, ஆறுமுகம் ரோடு –வெம்பக்கோட்டை ரோடு ஆகிய பகுதிகளில் ரோடு போடப்பட உள்ளன.