தினகரன் 02.11.2010
ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலில் ஒரே நபரின் பெயர் 5 இடங்களில் இருப்பதாக நகராட்சி கூட்டத்தில் புகார்விருதுநகர்
, நவ. 2: ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலில் ஒரே நபரின் பெயர் 5 இடங்களில் இருப்பதாக நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.விருதுநகர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் கார்த்திகா
, துணைத்தலைவர் காசிராஜன் தலைமையில் ஆணையர் ஜான்சன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் சுபேதா, ஜெயக்குமார், மாரியப்பன் ஆகியோர் பேசுகையில்:ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள தனியார் தொழிற்சாலை நகராட்சியின் அனுமதியின்றி இயங்கி வருகிறது
. பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற் சாலை லைசென்ஸ் இல்லாமல் இயங்க அனுமதிக்கக்கூடாது.இந்த தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் புகையால் ரயில் நிலையம் வரை கடும் பாதிப்பு ஏற்படுகிறது
. நகராட்சி அனுமதியின்றி இயங்கி வரும் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்Ó என்றனர்.கவுன்சிலர் கார்த்திகேயன் பேசுகையில்
, “ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலில் குளறுபடி உள்ளது. 33 வது வார்டை சேர்ந்த ஞானகுமார் என்பவரது படம் ஒரே பக்கத்தில் தொடர்ச்சியாக 5 இடங்களில் இடம்பெற்றுள்ளது. இதேபோல் புதிதாக அடையாள அட்டைக்காக படம் எடுத்த ஏராளமானோருக்கு இதுவரை அடையாள அட்டை வராதநிலை தொடர்கிறது. இதனால் தேர்தலில் ஓட்டு போடு முடியாதநிலை உருவாகிவிடும்Ó என்றார்.ஆணையர் ஜான்சன் பேசுகையில்
, “தேர்தல் கமிஷன்தான் இதனை சரிசெய்ய வேண்டும்Ó என்றார்.கவுன்சிலர் ஆறுமுகம்
: தேர்தல் கமிஷன் கூட்டங்களுக்கு ஆணையர்தான் செல்கின்றனர். அப்போது இதை தெரிவித்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண் டும்Ó என்றார். இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடந்தது.