தினமலர் 30.11.2010
வடலூர் நகரை அழகுப்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு
கடலூர் : வடலூர் நகரை அழகு படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடலூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் கடலூர்–விருத்தாசலம் சாலையின் இருபுறமும் அகலப்படுத்தவும், மண்சாலை பகுதியில் இருபுறமும் மேம்பாடு செய்யவும், வடலூர் நகரை அழகுபடுத்துவதற்காக சுகாதாரத்துறை அமைச்சரின் துரித முயற்சியில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பரிந்துரையின் படி, தமிழக அரசு சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து போக்குவரத்து துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த சாலை பணிகள் நிறைவடைந்தால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டு, போக்குவரத்து தங்குதடையின்றி நடைபெறும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.