மாலை மலர் 01.08.2009
கலைஞர் காப்பீட்டு திட்டம்: அரசு ஆஸ்பத்திரிகளிலும் இலவச சிகிச்சை 5-ந்தேதி முதல் அடையாள அட்டை
சென்னை, ஆக. 1-
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு உயிர் காக்கும் உயரிய சிகிச்சை இலவசமாக வழங்கப்பட வேண்டும் என் பதற்காக “கலைஞர் காப்பீட்டு திட்டம்” கடந்த 23-ந்தேதி தொடங்கப்பட்டது.
விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், கட்டிட, மண் பாண்ட, நெசவு தொழிலாளர்கள் உள்ளிட்ட நல வாரிய உறுப்பினர்களின் குடும்பம் பயன்பெறும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இத்திட்டம் அனைத்து கிராமங்களுக்கும் சென்றடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ரூ. 72 ஆயிரத்திற்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள ஏழைகள் இத்திட்டத்தில் சேர தகுதி உடையவர்கள்.
இருதயம், சிறுநீரகம், மூளை, ரத்தக்குழாய் அடைப்பு, எலும்பு முறிவு, இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை, பக்கவாதம், பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட 51 வகையான நோய்களுக்கு உயிர் காக்கும் உயர்ந்த சிகிச்சை இலவசமாக அளிக் கப்படுகிறது.
ஒரு லட்சம் வரை மருத்துவ உதவியை ஏழை குடும்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். 4 வருடத்துக்கு இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 337 தனியார் மருத்துவ மனைகளில் இத்திட்டத்தின் கீழ் உயர் சிகிச்சையை இலவசமாக பெறலாம். திட்டம் தொடங்கிய குறுகிய காலத்தில் 14 பேர் பயன் அடைந்துள்ளனர்.
முதல் கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் மட்டும் நடைமுறைப்படுத்த “கலைஞர் காப்பீட்டு திட்டம்” அரசு ஆஸ்பத்திரிகளிலும் கொண்டு வர சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
கிராமப்புற மக்கள் பயன் அடைவதற்காக அரசு, மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட தலைமை அரசு ஆஸ் பத்திரிகளிலும்
இத்திட்டத்தை செயல் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதலாவதாக 14 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைகளில் இலவச உயர் சிகிச்சை விரைவில் கொண்டு வரப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்குனர் எஸ். விநாயகம் கூறியதாவது:-
சென்னை அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி, கே.எம்.சி. ஆகிய 3 ஆஸ்பத்திரிகளிலும் உயிர் காக்கும் சிகிச்சை இலவச மாக அளிக்கப்படுகிறது. காப்பீட்டு திட்டத்தில் உள்ள 51 நோய்களில் பெரும் பாலான நோய்களுக்கு இந்த 3 மருத்துவமனைகளிலும் சிகிச்சை வழங்கப்படுகிறது.
எனவே ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ள வசதிகள் சென்னை மருத்துவமனை களில் ஏற்கனவே உள்ளதால் இவற்றில் காப்பீட்டு திட்டம் இன்னும் 10 நாட்களுக்குள் செயல்பாட்டுக்கு வரும்.
இது தவிர செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, சேலம், கோவை, தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 11 அரசு மருத்துவ கல்லூரிகளில் உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கும் வசதிகள் விரைவில் செய்யப்படும்.
இதற்காக தனி வார்டு அமைக்கப்படும். நோயாளி களுக்கு தேவையான வசதி கள் செய்து தரப்படும். கழிவறை அமைத்தல், சுத்த மாக வைத்து பராமரித் தல் போன்ற பணிகளை மேற்கொள்ள அனைத்து மருத்துவ கல்லுரி முதல்வர் களும் அறிவுறுத்தப்பட்டுள் ளனர். ஒரு மாதத்தில் 11 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் கலைஞர் காப்பீட்டு திட்டம் தொடங்கப்படும்.
அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைகளிலும் இந்த வசதி செய்யப்பட்டு உயர் சிகிச்சை அளிக்கப்படும். இதன் மூலம் கிராமஙக்ளில் உள்ள ஏழைகள் அரசு ஆஸ்பத்திரிகளில் எளிதாக சென்று உயிர் காக்கும் சிகிச் சையை பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறும் ஒரு கோடி ஏழை குடும்பங் களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. கிராமங்கள் தோறும் சென்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குடும்பத்தைச் சேர்ந்த வர்களை கண்டறிந்து அவர்களுக்கு மருத்துவ அடையாள அட்டை வழங்கப்படும்.
வருகிற 5-ந்தேதி முதல் நவம்பவர் 5-ந்தேதி வரை 3 மாதத்திற்கு இந்த பணி நடைபெறும். இந்த திட்டத்தின் மூலம் ஒரு கோடி குடும்பத்தைச் சேர்ந்த 4 கோடி பேர் பயன் அடைகிறார்கள்.