தினமணி 20.08.2012
ஆம்பூரில் 5 இடங்களில் உயர்கோபுர மின்விளக்கு
ஆம்பூர், ஆக. 19: ஆம்பூர் நகரில் 5 இடங்களில் ரூ.20 லட்சம் செலவில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கஸ்பா – பி, வி.ஏ. கரீம் ரோடு, ஓ.வி. ரோடு பஜார் பகுதி, பைபாஸ் சாலையில் சாமியார் மடம் சந்திப்பு, பஜார் பஸ் நிறுத்தம் சந்திப்பு ஆகிய 5 இடங்களில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
வி.ஏ. கரீம் ரோடில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின் விளக்கை நகர்மன்றத் தலைவர் சங்கீதா பாலசுப்பிரமணி தொடங்கிவைத்தார். விழாவில் நகர்மன்ற உறுப்பினர் ஜமீல் அஹமத், அதிமுக மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு முன்னாள் செயலர் வி. கலீலூர் ரஹ்மான், நகராட்சி அலுவலர் பிரேம் ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.