மதுரை மாநகராட்சியில் 5% குறைவாக ஏலம் போன இனத்திற்கு மறு ஏலம்?
மதுரை: மதுரை மாநகராட்சியில் 5 சதவீதத்திற் கும் குறைவாக ஏலம் போன இனத்திற்கு மறு ஏலம் நட த்த அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.
மதுரை மாநகராட்சி யில் 48 இனங்களுக்கான ஏலம் கடந்த மாதம் 26ம் தேதி நடந்தது. இதில் மாநகராட்சி நிர்ணயித்த தொகை யை விட கூடுதலான தொ கைக்கு 6 இனங்கள் ஏலம் போனது.
அதாவது, பழைய சென் ட்ரல் மார்க்கெட் வளாகம் பகுதியில் சுற்றுலா வாகனத்திற்கு வசூல் செய்யும் உரிமத்திற்கு மாநகராட்சி நிர்ணயித்த தொகை ரூ.7 லட்சத்து 2 ஆயிரம். ஆனால் ரூ.46 லட்சத்திற்கு ஏலம் போனது.
ஆரப்பாளையம் கட்டண கழிப்பறைக்கு மாநகராட்சி நிர்ணயம் செய்த ஏலத்தொகை ரூ.8 லட்சத்து 87 ஆயிரம். ஆனால் ரூ.34 லட்சத்திற்கு ஏலம் போனது. இதே போன்று எல்லீஸ் நகர் பகுதியில் சுற்றுலா வாகன வசூல் செய்யும் உரிமத்திற்கு மாநகராட்சி நிர்ணயித்தது ரூ.13 லட்சம். ஏலம் போனது ரூ.15 லட்சத்து ரூ.50 ஆயிரம்.
மாநகராட்சி நிர்ணயித்ததை விட அதிக தொகைக்கு ஏலம் போனதால் மாநகராட்சிக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்பதால் இதற்கான உரிமம் சம்பந்தப்பட்ட ஏலதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள ஏலம் எடுக்கப்பட்ட இனத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாநகராட்சி நிர்ணயித்த தொகையை விட 5 சதவீதத்திற்கும் குறைவான ஏலம் இனத்தை மறு ஏலம் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.