கூடலூர் பேரூராட்சியில் 5 இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள்
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் ரூ.20 லட்சம் செலவில் ஐந்து இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படுகின்றன.
தமிழக அரசின் வறட்சி நிவாரண சிறப்புத் திட்டத்தின் கீழ் பொது நிதியில் இருந்து 1-வது வார்டுக்குள்பட்ட செல்வபுரம், 6-வது வார்டுக்குள்பட்ட சாமிசெட்டிபாளையம், 17-வது வார்டுக்குள்பட்ட சக்தி நகர், 8-வது வார்டுக்குள்பட்ட வஞ்சிமாநகர், 12-வது வார்டுக்குள்பட்ட பி.அன்டு டி. காலனி ஆகிய இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படுகின்றன.
இப்பணியை செயல் அலுவலர் சிவசாமி முன்னிலையில் பேரூராட்சித் தலைவர் அறிவரசு தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் செல்வராஜ் மற்றும் மன்ற உறுப்பினர்கள், நிலத்தடி நீர் ஊற்று நிபுணர் தனபாலன் ஆகியோர் இப்பணிகளைப் பார்வையிட்டனர்.