தினமணி 15.09.2009
குடிநீர் குழாயில் மின்மோட்டார்: 5 இணைப்புகள் துண்டிப்பு
திருநெல்வேலி, செப். 14: திருநெல்வேலியில் 5 குடிநீர் குழாய் இணைப்புகளில் மின் மோட்டார் பொருத்தப்பட்டிருந்ததாக அதன் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை துண்டித்தனர்.
திருநெல்வேலி நகரம் பகுதியில் மாநகராட்சி உதவி ஆணையர் எல்.கே. பாஸ்கர் தலைமையில் அதிகாரிகள், வீடுகளில் முறைகேடாக குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறதா என திங்கள்கிழமை திடீர் சோதனை செய்தனர்.
இச் சோதனையில் 5 வீடுகளில் மின்மோட்டார் பொருத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், அந்த மோட்டார்களை பறிமுதல் செய்து, குடிநீர் இணைப்பை துண்டித்தனர்.