தினமலர் 11.03.2010
ரூ. 50 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் போளூர் பேரூராட்சியில் தீர்மானம்
போளூர் : 50 லட்சம் ரூபாய் செலவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள போளூர் பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.போளூர் பேரூராட்சி கூட்டம் அதன் தலைவர் ரங்கா விஸ்வநாதன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சண்முகம் மற்றும் அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்துகொண்ட கவுன்சிலர்கள் அனைவரும் தங்கள் வார்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசினர். பிப்ரவரி மாத வரவு–செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.தீர்மானங்கள்: 2010-11ம் ஆண்டுக்கு அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் போளூர் பேரூராட்சி தேர்வு செய் யப்பட்டுள்ளது.
இந்த திட் டத்தை பயன்படுத்தி 50 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ள மன்ற தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.பஸ் நிலையத்துக்கு செல் லும் பிரதான சாலையை தார்ச்சாலையாக மாற்றி அதன் இருபுறங்களிலும் மழைநீர் கால்வாய்கள் அமைத்து மின்விளக்குகள் அமைப்பது, புதிய சமுதாயக்கூடம் கட்டுதல் மற்றும் பஸ்நிலையத்தில் வணிக வளாகங்கள் கட்டுதல், 10 லட்சம் ரூபாய் செலவில் ஊரணி குளத்தை சரிபடுத்துவது, அனைத்து குடிசை பகுதி தெருக்களிலும் சிமென்ட் சாலை அமைப் பது, சுடுகாடுகளை மேம்படுத்தி தெருவிளக்கு அமைப் பது, மேலும் பொதுமக்களின் தேவையறிந்து பல திட்டங்களை மேற் கொள் வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இக்கூட்டத்தில், கவுன்சிலர்கள் செல்வன், பாண்டுரங்கன், ஏழுமலை, ஆறுமுகம், இளங்கோவன், பாபு உட்பட அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். தலைமை எழுத்தர் சண்முகம் நன்றி கூறினார்.