தினமலர் 16.03.2010
சென்னையில் 50 முக்கிய சாலைகளின் பெயர்கள் மாற்றம்! தமிழறிஞர்கள் பெயர் சூட்ட மாநகராட்சி முடிவு
சென்னை: சென்னை மாநகராட்சியின் 2010-11ம் ஆண்டிற்கான பட்ஜெட் நேற்று வெளியிடப்பட்டது. வரி விதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் ராதா சம்மந்தம், பட்ஜெட்டை வெளியிட்டார், இதில், மாநகராட்சியின் மொத்த வரவு 1,787.90 கோடி ரூபாய்; மொத்த செலவு 1,789.03 கோடி ரூபாயாக தெரிவிக்கப்பட்டது.
பட்ஜெட் குறித்து மேயர் சுப்ரமணியன், நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், சென்னை மாநகராட்சி ஆற்றியுள்ள சிறப்பு பணிகளான கல்வி, சுகாதாரம், குடும்ப நலம், அழகிய பூங்காக் கள், பாலங்கள் ஆகியவற்றை சித்தரிக்கும் வகையில் ஓர் அலங் கார ஊர்தி அனுப்பி வைக்கப் படும். செம்மொழி மாநாட்டிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், சென்னை நகரில் குறைந்தபட்சம் 50 முக்கிய சாலைகளுக்கு தமிழறிஞர்களின் பெயர் சூட்டப்படும்.
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 3,500க்கும் மேற் பட்ட கட்டடங்களில் திருக்குறள் எழுதி வைக்கப்படும். வணிக நிறுவனங்களில் அறிவிப்பு பெயர் பலகைகள் தமிழில் பிரதானமாக எழுதும் வகையில் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி சேவை பற்றி இணையதளம் தற்போது ஆங்கிலத்தில் மட்டும் உள்ளது; அதை தமிழிலும் அறிமுகப்படுத்தப்படும்.