பத்மநாபபுரம்: ரூ.50 லட்சத்தில் துப்புரவுப் பணியாளர் குடியிருப்பு
பத்மநாபபுரம் நகராட்சியில் ரூ. 50 லட்சத்தில் கட்டப்படவுள்ள துப்புரவுப் பணியாளர் குடியிருப்பு கட்டுமானப் பணியை அமைச்சர் கே.டி. பச்சைமால் தொடங்கி வைத்தார்.
பத்மநாபபுரம் நகராட்சி வார்டு எண் 13- கொல்லக்குடிமுக்கில் உள்கட்டமைப்பில் விடுபட்ட இனங்கள் நிரப்புதல் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சத்தில் துப்புரவுப் பணியாளர் குடியிருப்பு கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான விழா கொல்லக்குடிமுக்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர்.சத்யாதேவி தலைமை வகித்தார். துணைத் தலைவர் பீர்முகமது, உறுப்பினர்கள் ஸ்ரீ கலா, ஸ்ரீகுமார் முன்னிலை வகித்தனர். அமைச்சர் கே.டி. பச்சைமால் கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் மேத்யூஜோசப், பொறியாளர் கிரேஸ் அன்னபெர்லி, சுகாதார அலுவலர் டெல்விஸ்ராஜ், மேலாளர் குமார், அதிமுக அவைத் தலைவர் சிவகுற்றாலம், நகரச் செயலர் ஜகபர்சாதிக் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.