மரப்பேட்டை கந்தசாமி பூங்கா 50 லட்சத்தில் சீரமைப்பு
பொள்ளாச்சி, : பொள்ளாச்சி மரப்பேட்டை நூலகம் அருகே உள்ள கந்தசாமி பூங்காவை ரூ 50 லட்சம் மதிப்பில் சீரமைப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்ச்சி மரப்பேட்டை நூலகம் அருகே கந்தசாமி பூங்கா உள்ளது. அது கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. காலை, மாலை நேரங்களில் மக்கள் ஏராளமானோர் பயன்படுத்தி வந்தனர்.
கடந்த 10 ஆண்டுகளாக பூங்காவில் பராமரிப்பு பணிகள் நடக்கவில்லை. இதனால் பூங்காவின் பெரும் பகுதி புதர்மண்டியது. அதனால் மக்களின் வருகை அடியோடு நின்றது.
இந்நிலையில், சிதிலமடைந்து வரும் கந்தசாமி பூங்காவை முறையாக பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று நகராட்சிக்கு மக்கள் கோ ரிக்கை வைத்தனர். அதை தொடர்ந்து கந்தசாமி பூங்கா வை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ரூ 50 லட்சம் நிதி ஒதுக்கி சீரமைக் கும் பணி நடந்து வருகிறது.