தமிழ் முரசு 27.06.2013
வாலாஜாபாத் தெருக்களில் 50 பன்றிகள் பிடிபட்டன: பேரூராட்சி அதிரடி
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சியில் பன்றிகள் நடமாட்டம் அதிகமாக
இருப்பதாகவும், மழைநீர் கால்வாய், காலி இடங்களில் தேங்கி நிற்கும்
தண்ணீரில் பன்றிகள் இறங்கி துர்நாற்றம் ஏற்படுவதாகவும் புகார்கள் வந்தன.
இதையடுத்து பன்றி பிடிக்க பேரூராட்சி நடவடிக்கை எடுத்தது. நேரு நகர்,
சேர்க்காடு, ஆறுமுகபேட்டை ஆகிய பகுதியில் சுற்றிய 50 பன்றிகள் நேற்று
பிடிக்கப்பட்டது. அவற்றை திருப்போரூர் பகுதியில் உள்ள வனத்தில் விட்டனர்.
இது
பற்றி பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் கூறுகையில், ‘பன்றி
உரிமையாளருக்கு நோட்டீஸ் கொடுத்தோம். அவர்கள் அலட்சியமாக இருந்ததால்
பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் பேரூராட்சி இறங்கியது.
வெள்ளேரியம்மன் கோயில் பகுதி, பாலாற்று பகுதி மற்றும் அனைத்து வார்டுகளில்
உரிமையாளர்கள் பன்றிகளை அப்புறப்படுத்தாவிட்டால் இதுபோன்ற நடவடிக்கை
எடுக்கப்படும்‘ என்றார்.