தினத்தந்தி 30.10.2013
வெங்கம்பூர் பேரூராட்சியில் ரூ.50 லட்சம் செலவில் புதிய தார் சாலை

வெங்கம்பூர் பேரூராட்சிக்கு உள்பட்ட
வெற்றிகோனார்பாளையத்தில் வடிகாலுடன் கூடிய தார்சாலை அமைக்க ரூ.50 லட்சம்
நிதி ஒதுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, இதற்கான பணிகள் தொடக்க விழா
நடைபெற்றது.
விழாவுக்கு மொடக்குறிச்சி
ஆர்.என்.கிட்டுசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார்.
வெங்கம்பூர் பேரூராட்சி தலைவர் சூர்யாசிவக்குமார், செயல் அதிகாரி
சின்னதுரை, ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், பேரூர் செயலாளர் நல்லசாமி,
கவுன்சிலர்கள் ஈஸ்வரிகணபதி, வட்டார தலைவர் கோபால் உள்பட பலர்
கலந்துகொண்டார்கள். முடிவில் கவுன்சிலர் சிவகாமி நன்றி கூறினார்.