தினத்தந்தி 17.02.2014
நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் ரூ.50 லட்சம் செலவிலான திட்ட பணிகள் தொடக்கம்

நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் மெயின்ரோடு
இடதுபுறம் ரூ.25 லட்சம் செலவில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி மற்றும்
காந்திநகரை இணைக்கும் பகுதியில் ரூ.25 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும்
பணி தொடங்கியது. பேரூராட்சி தலைவர் சரோஜா தலைமை தாங்கி, தொடங்கி வைத்து,
பணியினை பார்வையிட்டார். அப்போது செயல் அலுவலர் ர.ஆனந்தன், பேரூராட்சி
துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.
செயல் அலுவலர் கூறுகையில், பேரூராட்சிக்கு
செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை
உள்ளிட்ட வரிகளை வருகிற 28–ந் தேதிக்குள் செலுத்த வேண்டும், தவறினால்
சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என
தெரிவித்தார்.