தினமலர் 31.08.2012
ராமநாதபுரத்தில் ரூ.50 லட்சத்தில் “வாக்கர்ஸ்’ பூங்கா : நகராட்சி தலைவர் தகவல்
ராமநாதபுரம்:ராமநாதபுரம் தினமலர் நகர் அருகே சிதம்பரம்பிள்ளை ஊரணியில் 50 லட்ச ரூபாயில் “வாக்கர்ஸ் பார்க்’ அமைக்கப்பட உள்ளது. இதில் சிறுவர் பூங்கா, நடைபயிற்சி பாதை, அலங்கார விளக்குகள், டூவீலர் ஸ்டாண்ட், கழிப்பறை உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. பாதாள சாக்கடை திட்டத்திற்கு, வீடுகள் தோறும் மனித இறங்கு குழிகளிலிருந்து வீட்டிற்கு செல்லும் இணைப்பு தொட்டிகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. சுத்திகரிப்பு நிலையத்தில் இறுதிக்கட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மனித இறங்கும் குழிகளில் உள்ள அடைப்புகள் சரிசெய்யப்பட்டு, இணைப்பு தொட்டிகள் அமைக்கும் பணிமுழுமையடைந்தவுடன், திட்டம் செயல்பட துவங்கிவிடும், என நகராட்சி தலைவர் எஸ்.கே.ஜி.சேகர் தெரிவித்தார்.