மாலை மலர் 13.08.2010
பெரம்பூரில் பதுக்கல்
500 கிலோ டீத்தூள் சிக்கியது கலப்படம் செய்ததா? என ஆய்வு செய்ய உத்தரவு
பெரம்பூர்
, ஆக. 13- பெரம்பூர் பகுதியில் உள்ள டீக்கடைகளில் போலி டீத்தூள் சப்ளை செய்யப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது.இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆய்வாளர் பால்பாண்டியன் டீக்கடைகளில் ஆய்வு நடத்தினார்
. அங்கிருந்த டீத்தூள்களை கைப்பற்றி இதை சப்ளை செய்வது யார்? என்று கேட்டு விசாரணை நடத்தினார்.அப்போது பெரம்பூர் கண்ணன் தெருவைச் சேர்ந்த பாபு என்பவர் டீத்தூள் சப்ளை செய்தது தெரிய வந்தது
. அவரது வீட்டை சோதனையிட்டபோது 500 கிலோ டீத்தூள் சிக்கியது.இவை நல்ல தேயிலையா
? அல்லது கலப்படம் செய்யப்பட்டதா? என்பதை அறிய டீத்தூளின் மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வின் முடிவில் உண்மை நிலை தெரிய வரும்.