தினமலர் 26.03.2010
ப.வேலூர் ஹோட்டலில் 5,000 தரமற்ற முட்டை அழிப்பு
ப.வேலூர்: ப.வேலூர் சுற்று வட்டாரத்தில் திடீர் ஆய்வு செய்த சுகாதாரத் துறையினர், ஹோட்டல்களில் தரமற்ற முறையில் பயன்படுத்தப்பட்ட 5,000 முட்டைகளை அழித்தனர்.
மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சேகர் உத்தரவின் பேரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், தவி ஆய்வாளர் அடங்கிய குழு ப.வேலூர் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள இறைச்சிக் கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.விற்பனை செய்யப்படும் இறைச்சி சுகாதார முறையில் உள்ளதா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது. உடைந்த முட்டைகள் பயன்படுத்தி ஆப்பாயில், ஆம்லேட் போன்றவை விற்பனை செய்வதாகவும் தகவல் கிடைத்தது.அங்கு, 20க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் ஆய்வு நடத்தி 5,000 உடைந்த முட்டைகளை அலுவலர்கள் அழித்தனர். ‘இதுபோன்ற தரமற்ற பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.