தினகரன் 11.10.2010
வேரோடு சாய்ந்து விழுவதை தடுக்க மரக்கிளைகளை வெட்ட வேண்டும் தவறினால் ரூ5,000 அபராதம்மும்பை
, அக். 11: இரண்டு வாரத்துக்குள் மரக்கிளைகளை வெட்ட வேண்டும் இல்லை என்றால் அபராதம் கட்ட நேரிடும் என 500 ஹவுசிங் சொசைட்டிகளுக்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.மரங்கள் வேரோடு சாய்ந்து விபத்து ஏற்படுவது அண்மை காலத்தில் அதிகரித்து வருகிறது
. கடந்த 3 மாதத்தில் மட்டும் 4 சம்பவங்களில் ஒரு ஆண் உயிரிழந்தார், 3 பெண்கள் படுகாயமடைந்தனர். அதிக மழை மற்றும் வெயில் காரணமாக மரங்களின் வேர் பலவீனமடைவதே விபத்து ஏற்படுவதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.இதையடுத்து மரங்கள் வேரோடு சாய்ந்து விபத்து ஏற்படுவதை தடுக்க திட்டமிட்ட மாநகராட்சி
, மும்பை முழுவதும் உள்ள மரங்களில் நிலவரம் குறித்து ஆய்வு செய்தது. இதில் 500 ஹவுசிங் சொசைட்டிகளில் உள்ள மரங்களின் கிளைகள் மிகுதியாக வளர்ந்துள்ளன என்றும் இவற்றை கொய்யவில்லை என்றால் வேரோடு சாய்ந்து விழும் ஆபத்து இருப் பதாக கண்டறியப்பட்டது.இது குறித்து மாநகராட்சி துணை கமிஷனர்
(பூங்கா) சந்த்ரகாந்த் ரோக்டே கூறுகையில், “ஆய்வில் கண்டறியப்பட்ட 500 ஹவுசிங் சொசைட்டிகளுக்கு, இரண்டு வாரத்துக்குள் மரக்கிளைகளை கொய்ய வேண்டும் என உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். உத்தரவை மீறும் சொசைட்டிகளுக்கு ரூ5000 அபராதம் விதிக்கப்படும் என்றும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரம் விழுந்து மரணமடைந்த ரஹீம் ஷேக்(50) குடும்பத்தினருக்கு ரூ1 லட்சம் நஷ்ட ஈடு வழங்கப்படும்” என்றார்.