மாலைமலர் 19.02.2010
உடன்குடி பகுதியில் ரூ.51 லட்சத்தில் புதிய தார் சாலைகள்
உடன்குடி பேரூராட்சி தலைவர் சாகுல்ஹமீது வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:-
உடன்குடி பேரூராட்சி பகுதியில் நபார்டு வங்கி மாநில நிதி உதவியுடன் ரூ.50.82 லட்சத்தில் தார்சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிதி உதவியில், காட்டுவாத்தட்டு முதல் மெஞ்ஞானபுரம் சாலை வரை உள்ள தெருக்களிலும், கிறிஸ்தியாநகரம் வடக்கு தெரு, தெற்கு தெரு, சுல்தான்புரம் வடக்கு தெரு மற்றும் வைத்திலிங்கபுரம் தெருக்களில் ரூ.19.68 லட்சம் மதிப்பீட்டிலும், புதுமனை மேலத் தெரு, கோட்டவிளை காலனி மற்றும் வில்லிகுடியிருப்பு ஆகிய பகுதிகளில் ரூ.17.68 லட்சம் மதிப்பீட்டிலும், கொத்துவாபள்ளி தெரு கிழக்கு பகுதியிலிருந்து தோட்டக்காடு செல்லும் சாலை வரை ரூ.13.46 லட்சம் மதிப்பீட்டிலும், மொத்தம் ரூ.50.82 லட்சத்தில் புதிய தார்சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது டெண்டர் விடப்பட்டு, பணி உத்தரவு வழங்கப்படும் நிலையில் உள்ளது. விரைவில் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
இவ்வாறு உடன்குடி பேரூராட்சி தலைவர் சாகுல்ஹமீது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.