தினமணி 20.02.2010
உடன்குடி பேரூராட்சியில் ரூ. 51 லட்சம் செலவில் தார்சாலைகள்
உடன்குடி, பிப்.19: உடன்குடி பேரூராட்சிப் பகுதியில் ரூ. 51 லட்சம் செலவில் தார்சாலைகள் அமைக்கப்பட உள்ளதாக பேரூராட்சித் தலைவர் சாகுல்ஹமீது தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு.
உடன்குடி பேரூராட்சியில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ. 50.82 லட்சம் செலவில் தார்ச் சாலைகள் அமைக்கப்பட உள்ளது.
இதன்படி ரூ. 19.68 லட்சம் மதிப்பீட்டில் காட்டுவாதட்டு முதல் மெஞ்ஞானபுரம் சாலை வரையுள்ள அனைத்து தெருக்கள், கிறிஸ்தியாநகரம் வடக்குத் தெரு, சுல்தான்புரம் வடக்குத் தெரு மற்றும் வைத்திலிங்கபுரம் தெரு ஆகிய பகுதிகளில் புதிய தார்ச் சாலைகள் அமைக்கவும், ரூ.17.68 லட்சம் மதிப்பீட்டில் புதுமனை மேலத்தெரு, கோட்டைவிளை காலனி மற்றும் வில்லிகுடியிருப்பு பகுதிகளில் புதிய தார்ச் சாலைகள் அமைக்கவும், ரூ. 13.46 லட்சம் மதிப்பீட்டில் கொத்துவாப்பள்ளித்
தெரு கிழக்குப் பகுதியிலிருந்து தோட்டக்காடு செல்லும் பகுதி வரை புதிய தார்ச் சாலைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.