தினகரன் 26.10.2010
சாயல்குடியில் ரூ.52 லட்சம் செலவில் புதிய சாலை பணி
சாயல்குடி, அக்.26: சாயல்குடி பேரூராட்சியில் புதிய சிமென்ட் சாலை அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் லிங்கம்மாள் பால்காளை தலைமை வகித்தார். துணை தலைவர் ரத்தினம், செயல் அலுவலர் செந்திலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர்கள் சோலை, செந்தூர், வன்னியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயல் அலுவலர் செந்திலன் கூறுகையில், ‘2010&11 சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.52 லட்சம் செலவில் அரசு மானியத்தில் சிமென்ட் சாலை அமைக்கப்படுகிறது. கான்ட்ராக்டர்கள் முன்னிலையில் நவம்பர் ஒன்றாம் தேதி இப்பணிக்கான டெண்டர் விடப்படுகிறது’ என்றார்.