தினகரன் 26.05.2010
புனேயில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள 543 வழிபாட்டு தலங்களை இடிக்க மாநகராட்சி முடிவு
புனே,மே 26: புனேயில் சட்ட விரோதமாக கட்டப் பட்டுள்ள வழிபாட்டு தலங்களை இடிக்க மாந கராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. புனேயில் சட்டவிரோத வழிபாட்டு தலங்கள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினர். இதில் 543 சட்டவிரோத வழிபாட்டு தலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இவற்றை அகற் றுவது குறித்து மாநகராட்சி கமிஷனர் மகேஷ், போலீஸ் கமிஷனர் சத்யபால் சிங்குடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் , இந்த சட்ட விரோத வழிபாட்டு தலங்களை இடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இது குறித்து மாநகராட்சி சட்டவிரோத கட்டிடங் களை இடிக்கும் பொறுப்பு சிறப்பு அதிகாரி ரமேஷிடம் கேட்டதற்கு, “சட்டவிரோத வழிபாட்டு தலங்களை இடிப்பது தொடர்பாக போ லீஸ் இணை கமிஷனருடன் பேசினேன்.
இவற்றை அகற்ற போலீ சாரின் பாதுகாப்பு மிகவும் முக்கியமாக இருக்கிறது. ஆரம்பத்தில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூ றாக இருக்கும் வழிபாட்டு தலங்கள் இடிக்கப்படும். பின்னர் படிப்படியாக மற்ற வழிபாட்டு தலங்களும் இடிக்கப்படும்.
இது தவிர சாலை யோரத்தில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய் யப்படும் உணவு கடைகள் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கடைகள் உரிமம் பெறாமல் செயல்படுகின்றன.
அதோடு அவை பொது மக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின் றன. இது தொடர்பாக அனைத்து வார்டுகளிலும் தெரிவித்து விட்டோம். நாளையில் இருந்து அவற் றிற்கு எதிராக நடவடிக்கை தொடங்கும்“என்றார்.