தினமணி 02.08.2013
தினமணி 02.08.2013
குடிநீர் திருட்டு: 55 மின் மோட்டார்கள் பறிமுதல்
திருத்தங்கல் நகராட்சியில் குடிநீர் இணைப்பில் மின்
மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்த 55 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு,
அவற்றில் 5 மோட்டார்களுக்கு தலா ரூ. 12,500 அபராதம் விதிக்கப்பட்டு, வசூல்
செய்யப்பட்டுள்ளது என நகர் மன்றத் தலைவர் ஜி. தனலட்சுமி மற்றும் துணைத்
தலைவர் பொ. சக்திவேல் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள்
கூறியதாவது:
நகருக்கு குடிநீர் ஆதாரங்களாக உள்ள பகுதிகளில் போதிய மழை இல்லாததால்,
குடிநீர் தட்டுப்பாடு வரும் அபாயம் உள்ளது. எனவே, நகராட்சியில் உள்ள 21
வார்டுகளிலும், நகராட்சியில் குடிநீர் இணைப்பு பெற்றவர்கள், குடிநீர்
இணைப்பில் மின் மோட்டார் வைத்து தண்ணீர் எடுக்கக் கூடாது என வீடுவீடாக
துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
இந்த நிலையில் பல வீடுகளில் குடிநீர் இணைப்பில் மின் மோட்டார்
பொருத்தி தண்ணீர் பிடிப்பதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில்
நகராட்சியின் குடிநீர் திட்டப் பணியாளர்கள் கடந்த 16.7.2013 முதல் சோதனை
செய்யத் தொடங்கினார்கள்.
சோதனையில் குடிநீர் இணைப்புகளில் தண்ணீர் எடுக்க பயன்படுத்தப்பட்ட 55
மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 5 பேர் தலா ரூ. 12,500
அபராதத் தொகையை செலுத்தியுள்ளனர் என்றார்கள்.