தினமலர் 01.04.2010
ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு ரூ.5.5 லட்சம் செலவில் கார்
சின்னமனூர் : ஹைவேவிஸிற்கு சென்றுவரவும், வளர்ச்சிப்பணிகளை பார்வையிடவும் பேருராட்சி சார்பில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் நிர்வாக அதிகாரிகு ‘பொலிரோ‘ கார் வாங்கப்பட்டுள்ளது.ஹைவேவிஸ் பேருராட்சிக்கு உட்பட்டு மலைபகுதிகளான கார்டனா, மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, மேல்மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகராஜாமெட்டு ஆகிய எட்டு ஊர்கள் உள்ளன. மலைப்பகுதிக்கு பஸ் போக்குவரத்து ஒரு நாளுக்கு இருமுறைமட்டுமே உள்ளது. பலநாட்களில் இந்த பஸ்களும் செல்வதில்லை. ரோடு மற்றும் பஸ்வசதியின்மை காரணமாக அலுவலர்கள் குறித்தநேரத்தில் அலுவலகம் சென்று பணிபுரிவதிலும், பேரூராட்சி பகுதிகளுக்கு சென்று வளர்ச்சிப்பணிகளை பார்வையிடுவதிலும் சுணக்கம் ஏற்பட்டு வந்தது. இதனை கருத்தில்கொண்டு, நிர்வாகஅலுவலர் மற்றும் அலுவலர்களுக்கென பேருராட்சியின் பொது நிதியிலிருந்து ரூ..5.50 லட்சத்தில் ‘பொலிரோ‘ கார் வாங்கப்பட்டுள்ளது.இதன்முலம் பேருராட்சி அலுவலர்களின் நீண்டகால போக்குவரத்து பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.