தினகரன் 19.10.2010
ரூ55 லட்சத்தில் சாலை பணிகள்கடலாடி, அக்.19: முதுகுளத்தூர் பேரூராட்சியில் சிறப்பு சாலை திட்டத்தில் ரூ55 லட்சத்தில் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
முதுகுளத்தூர் பேரூராட்சியில் சிறப்பு சாலை திட்டத்தில் காந்திநகர் தெரு, பொன்னடியார் கோயில் தெரு, கந்தசாமிபுரம் தெரு, தெய்வேந்திரநகர் தெரு, செல்வியம்மன் கோயில் குறுக்கு தெரு, பெரிய பள்ளிவாசல் தெரு, சுந்தரபாண்டியன் ஊருணி தெரு, திடல் தெரு, அம்பேத்கர் நகர் தெரு, கடலாடி ரோடு தெரு, முகமதியார் தெரு ஆகிய தெருக்களில் ரூ55 லட்சத்தில் சிமென்ட், தார் சாலை அமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் விரைவில் துவங்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் முனியாண்டி தெரிவித்துள்ளார்.