சொத்து வரி வசூல்: ரூ. 550 கோடி இலக்கு
2013-14ஆம் நிதியாண்டில் சொத்துவரி ரூ. 550 கோடி வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013-14ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் நிலைக்குழு (வரிவிதிப்பு மற்றும் நிதி) தலைவர் சே. சந்தானம் கூறியது: கடந்த 2012-13ஆம் ஆண்டில் ரூ. 500 கோடி சொத்துவரியாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. 2013-14ஆம் நிதியாண்டில் இந்த வருவாய் ரூ. 550 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல, தொழில்வரி மூலம் ரூ. 230 கோடி வருவாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கேளிக்கை வரி மூலம் ரூ. 15 கோடியும், முத்திரைத்தாள் மீதான கூடுதல் வரி மூலம் ரூ. 120 கோடியும், மாநில நிதிக் குழு மானியம் மூலம் ரூ. 550 கோடியும் வருவாய் இருக்கும்.
இதர வருவாய்கள் மூலம் ரூ. 416.53 கோடி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.