தினமணி 08.01.2014
மாநகராட்சியில் ரூ.57 லட்சத்தில் திட்டப் பணிகள்: மேயர் திறந்து வைத்தார்
தினமணி 08.01.2014
மாநகராட்சியில் ரூ.57 லட்சத்தில் திட்டப் பணிகள்: மேயர் திறந்து வைத்தார்
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 17
மற்றும் 18-ஆவது வார்டுகளில் ரூ.56.80 லட்சம் செலவில் முடிக்கப்பட்ட
பல்வேறு திட்டப் பணிகளை மேயர் செ.ம.வேலுசாமி செவ்வாய்க்கிழமை திறந்து
வைத்தார்.
சட்டப்பேரவை உறுப்பினர் தா.மலரவன், ஆணையாளர் க.லதா முன்னிலை வகித்தனர்.
17-ஆவது வார்டு வடவள்ளி மகாராணி அவின்யூ பகுதியில் மாநகராட்சி பொது நிதி
ரூ.14.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தையும், வடவள்ளி
குருசாமி நகர் பகுதியில் தக்ஷô நிறுவனம் மூலமாக ரூ.13 லட்சம் மதிப்பில்
அமைக்கப்பட்டிருந்த பூங்காவையும், 18-ஆவது வார்டு வீரகேரளம் சுண்டப்பாளையம்
பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி ரூ.15 லட்சம்
மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தையும், வீரகேரளம் சத்யா
காலனி பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி ரூ.14
லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாலத்தையும் மேயர் செ.ம.வேலுசாமி
திறந்து வைத்தார்.
வடவள்ளி, சுண்டப்பாளையம் பகுதி நியாய விலைக்கடைகளில் தமிழக அரசின்
பொங்கல் பண்டிகைக்கான சிறப்புத் தொகுப்பு பொருள்களையும் மேயர் வழங்கினார்.
துணை ஆணையர் சு.சிவராசு, மேற்கு மண்டலத் தலைவர் சாவித்ரி, கண்காணிப்பு
பொறியாளர் கணேஷ்வரன், நகரப் பொறியாளர் சுகுமார், உதவி ஆணையர் சுப்ரமணியன்,
சுகாதார குழுத் தலைவர் தாமரைச் செல்வி, கல்வி குழுத் தலைவர் சாந்தாமணி,
நியமனக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து
கொண்டனர்.