தினமலர் 16.08.2012
அமலாக்க பிரிவில் 580 புதிய பணியிடங்கள் : அரசின் முடிவுக்காக சி.எம்.டி.ஏ., காத்திருப்பு
சி.எம்.டி.ஏ., அமலாக்கப்பிரிவில், 580 புதிய பணியிடங்களை உருவாக்குவது தொடர்பான கருத்துரு மீதான அரசின் முடிவுக்காக அதிகாரிகள், மூன்று ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.
இதனால், சி.எம்.டி.ஏ.,வில் விதிமீறல் கட்டடங்கள் குறித்த நடவடிக்கைகள் முடங்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், கருத்துரு அனுப்பி மூன்று ஆண்டுகள் ஆன பின்பும் வலியுறுத்த@லா, @காரிக்கை@யா, சி.எம்.டி.ஏ., தரப்பில் இல்லாத பட்Œத்தில், கருத்துரு வெறும் கண்துடைப்பாக மட்டும் தெரிகிறது. சி.எம்.டி.ஏ.,வில் திட்ட அனுமதி வழங்கப்பட்ட கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் வழங்குவதற்காக, 1986ம் ஆண்டு அமலாக்க பிரிவு துவக்கப்பட்டது. இதன் பின் விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தேவையின் அடிப்படையில், இதற்கான அதிகாரமும் கண்காணிப்பு குழுவுக்கு வழங்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்து, இப்போது வரை இதன் பணியாளர், அதிகாரிகள் எண்ணிக்கை அதிகரிக்கப் படவில்லை.பணியிடங்கள் தற்போதைய நிலையில், சி.எம்.டி.ஏ., அமலாக்க பிரிவில், ஒரு மூத்த திட்ட அதிகாரி தலைமையில் 41 தற்காலிக பணியிடங்களும், 17 நிரந்தர பணியிடங்களும் என, மொத்தம் 58 பணியிடங்கள் உள்ளன. சென்னை பெருநகர் பகுதியான 1,189 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு முழுவதிலும், எங்கு யார் விதிகளை மீறி கட்டடம் கட்டினாலும், அதை தடுக்க வேண்டியது இவர்கள் பொறுப்பாக இருந்தது.
இந்த பிரிவின் பணிகளில் நிலவும் தொய்வை நீக்கவோ, பணியிடங்களை அதிகரிப்பது குறித்தோ சி.எம்.டி.ஏ., நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கண்காணிப்பு குழு உத்தரவு இந்த நிலையில், விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஐகோர்ட் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுவின் வலியுறுத்தல் அடிப்படையில், பணியிடங்களை அதிகரிப்பதற்கான கருத்துரு 2009ம் ஆண்டு தயாரிக்கப் பட்டு அரசுக்கு அனுப்பப் பட்டது. இதன்படி, அமலாக்கப்பிரிவில் புதிதாக 580 பணியிடங்களை உருவாக்க வலியுறுத்தப் பட்டது.
அரசு முடிவு எப்போது?
இது குறித்து, சி.எம்.டி.ஏ., உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆரம்ப நிலையில் இருந்தே இக்கருத்துருவை முழுமையாக ஏற்க அரசு மறுத்து வருகிறது. இதில், குறிப்பிட்ட சில பணியிடங்கள் தேவையில்லை என்று அரசுதரப்பில் கூறப்பட்டதை அடுத்து எண்ணிக்கை குறைக்கப் பட்டது.
தற்போதைய நிலவரப்படி, 580 புதிய பணியிடங்கள் தேவைப்படும் நிலையில், இதில் பாதி அளவுக்கு மட்டுமே பணியிடங்களை அதிகரிக்க அரசு முன்வந்துள்ளது. ஆனால், இதிலும்
இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கண்காணிப்பு குழுவுக்கு அளிக்கப் பட்டு இருந்தாலும், இந்த அதிகாரத்தை பயன்படுத்தாமல் இருந்தனர் என்பதற்காக, இந்த பிரிவினரை தண்டிக்க எவ்வித வழி முறைகளும் வகுக்கப்படவில்லை.இதுவே தீர்வாகுமா?
இது குறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது: பணியிட அதிகரிப்புக்கான கருத்துருவிலும், பணியாளர்களுக்கான பொறுப்பை உறுதிப் படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து எதுவும் குறிப்பிடப் படாதது புதிராக உள்ளது.
மேலும், மாநகராட்சியில், கட்டட அனுமதி வழங்குவது உள்ளிட்ட பொறுப்புகள் உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர் நிலையிலேயே அளிக்கப் பட்டு உள்ளது. இவர்களை கண்காணிக்கும் வகையிலேயே உயர் பதவிகள் உள்ளன.
டி.டி.சி.பி.,யிலும் இதே நிலைதான் உள்ளது. ஆனால், சி.எம்.டி.ஏ.,வில், திட்ட உதவியாளர், உதவி திட்ட அதிகாரிகள் கோப்புகளை உருவாக்குபவர்களாகவும், இவர்களுக்கு மேல் உள்ள துணை திட்ட அதிகாரி, மூத்த திட்ட அதிகாரிகள் ஆகியோர் அந்த கோப்புகளை அடுத்தடுத்த நிலைக்கு அனுப்புபவர்களாகவும் தான் உள்ளனர்.புதிய பணியிடங்களை உருவாக்கும்போதும், இத்தகைய மேல் நிலை பதவிகளே அதிகமாக உருவாக்கப்படுவதால் பொறுப்புகளை உறுதிப்படுத்த முடியாத நிலை உள்ளது.இதை, சீரமைக்க அரசுதான் முடிவெடுக்க வேண்டும். அப்போது தான் விதிமீறல் கட்ட டங்களை தடுக்க வழி ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –