தினமணி 14.11.2009
6-வது குடிநீர்த் தேக்கத்தில் 10 அடி நீர் வரத்து
ராஜபாளையம், நவ.13: ராஜபாளையம் பகுதியில் பரவலாக பெய்த மழையால் 6-வது குடிநீர்த் தேக்கத்தில் 10 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. ராஜபாளையம் மேற்கேயுள்ள வனப் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நல்ல மழை பெய்துள்ளதால், முடங்கியாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ராஜபாளையத்திற்கு குடிநீர் விநியோகம் கிடைக்கும் ஆறாவது மைல் குடிநீர்த் தேக்கத்தில் 10 அடி தண்ணீர் வந்து நிரம்பியுள்ளது. மொத்தம் 18 அடி கொள்ளவு கொண்ட இந்த குடிநீரத் தேக்கம் முழுவதும் நிரம்பினால் ராஜபாளையம் நகர்ப்பகுதிக்கு 4 மாதங்களுக்கு 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் கிடைக்கும்.