தினமணி 13.04.2010
மாநகராட்சிப் பணியாளர்களுக்கு 6-வது ஊதியக் குழு நிலுவைத் தொகை அளிப்பு
திருச்சி, ஏப். 12: திருச்சி மாநகராட்சிப் பணியாளர்களுக்கு 6-வது ஊதியக் குழுவின் நிலுவைத் தொகையின் 2-வது தவணை ரூ. 2.70 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி தெரிவித்தார்.
இந்தத் தவணையை ஏப்ரல் மாத ஊதியத்துடன் வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் ரொக்கமாக இந்தத் தொகை வழங்கப்பட்டது.
மாநகராட்சியில் பணிபுரியும் 26,578 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ. 2.37 கோடியும், 1,326 ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ. 31.07 லட்சமும் அளிக்கப்பட்டது‘ என்றார் அவர்.