தினமணி 17.04.2010.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 6 மாதங்கள் நடைபெறும்:ஆட்சியர்
கோவை, ஏப்.16: மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி தொடர்ந்து 6 மாதங்கள் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத் தெரிவித்தார்.
÷மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணிக்கான முன்னேற்பாடு கூட்டத்தில் அவர் பேசியது:
÷1872}ல் இருந்து பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. தற்போது 15}வது முறையாக 2011}ல் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டே மத்திய, மாநில அரசுகள் தங்களது திட்டங்களைச் செயல்படுத்துகின்றன.
÷மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி அனைத்துத் துறை அலுவலர்களையும் சார்ந்தது. ஆகவே, தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அலுவலர்கள் செயல்பட வேண்டும். இப் பணி 5 அல்லது 6 மாதங்கள் தொடர்ந்து நடைபெறும். வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் பொருளாதாரச் சூழலில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மிக முக்கியமானது. விவரங்கள் சேகரிப்பு துல்லியமாக இருப்பது அவசியம். கோவை மாவட்டத்தில் தொலைதூர கிராமங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. தகவல் தொடர்பிலும், போக்குவரத்து வசதியும் அனைத்துப் பகுதிகளுக்கும் இருக்கிறது. ஆகவே, மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பெரிய சிரமங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. அதேநேரம் அடிக்கடி குடிபெயர்தல், புதிய குடியிருப்புகள் உருவாக்கம் அதிகம் இருக்கிறது. கணக்கெடுப்பு அலுவலர்கள் இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
÷மாவட்ட வருவாய் அலுவலர் எ.சண்முகசுந்தரம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மு.பாலச்சந்திரன், கேவை மாவட்டத்துக்கான மத்திய அரசின் கணக்கெடுப்பு பணி ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
÷மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியின் முதன்மை கணக்கெடுப்பு அலுவலராக மாவட்ட ஆட்சியரும், ஒருங்கிணைப்பாளராக ஆட்சியரின் நேர்முக உதவியாளரும் (பொது), 6 வட்டாட்சியர், 6 நகராட்சிகளின் ஆணையர்கள் பொறுப்பு அலுவலர்களாகவும் செயல்படுவர்.