தினமலர் 03.05.2010
வீட்டு வசதி வாரிய வீடுகள் வரும் 6ல் குலுக்கலில் தேர்வு
கோவை : வீட்டு வசதி பிரிவில் வீடுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு,மே 6ம் தேதி குலுக்கல் மூலம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
கோவை வீட்டு வசதி பிரிவு நிர்வாக அதிகாரி அறிக்கை: தமிழ்நாடு வீட்ட வசதி வாரியம் வெள்ளகிணர் பகுதி – 2, நிலை 2ல் சுயநிதி திட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளுக்கு ஐந்து சதவீதம் முன்வைப்பு தொகையுடன் பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு குலுக்கல் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. ஒதுக்கீடு வேண்டி விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், மே 6ம் தேதி காலை 11.00 மணிக்கு, கோவை வீட்டுவசதி பிரிவு அலுவலகத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்கலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.