தினபூமி 24.12.2013
6 மாவட்டங்களில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம்
சென்னை, டிச.24 – வேலூர் உட்பட 6 மாவட்டங்களில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டத்தை
முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில் காணொலி காட்சியின் மூலம் தொடங்கி வைத்தார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:_
முதல்வர் ஜெயலலிதா நேற்று (23.12.2013) தலைமைச் செயலகத்தில், நகராட்சி
நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 9 கோடியே 55 லட்சம்
ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள விழுப்புரம் நகராட்சி குடிநீர்
அபிவிருத்தித் திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாகத் துவக்கி வைத்தார்.
மேலும், ஈராடு, திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர்
மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 21 கோடியே 47 லட்சத்து 12 ஆயிரம்
ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு குடிநீர்த் திட்டங்களைத் துவக்கி வைத்தார்.
அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தேவையான அளவு வழங்கப்பட
வேண்டும் என்பதும், மக்களின் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்
என்பதும் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் நோக்கமாகும்.
இந்த உயரிய நோக்கத்தினை நிறைவேற்றும் வகையில், விழுப்புரம் நகராட்சி
குடிநீர் அவிவிருத்தித் திட்டம் 9 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்
அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு நபர்
ஒருவருக்கு 90 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். இதன்
மூலம் 95,439 பேர் பயனடைவார்கள். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால்
விழுப்புரம் நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்த குடிநீர் அபிவிருத்தித்
திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா நேற்று காணொலிக் காட்சி மூலமாகத்
திறந்து வைத்தார்.
மேலும், <ரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் பேரூராட்சியில் 10,772 பேர்
பயனடையும் வகையில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர்
ஒருவருக்கு 90 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் குடிநீர்
அபிவிருத்தித் திட்டம்;
திருச்சிராப்பள்ளி மாவட்டம், உப்பிலியாபுரம் பேரூராட்சியில் 7,000 பேர்
பயனடையும் வகையில் 24 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நாள்
ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 70 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர்
வழங்கும் குடிநீர் அபிவிருத்தித் திட்டம்;
திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூர் ஒன்றியத்திற்குட்பட்ட சித்தாமூர்
மற்றும் 27 குடியிருப்புகளில் 13,756 பேர் பயனடையும் வகையில் 1 கோடியே 85
லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டர்
வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கூட்டுக் குடிநீர்த் திட்டம்;
காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங்கொளத்து”ர் ஒன்றியத்திற்குட்பட்ட
மேலமையூர் மற்றும் 12 குடியிருப்புகளில் 7,357 பேர் பயனடையும் வகையில் 97
லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு
40 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கூட்டுக் குடிநீர்த்
திட்டம்;
வேலூர் மாவட்டம், வாலாஜா ஒன்றியத்திற்குட்பட்ட சுமைதாங்கி மற்றும் 13
குடியிருப்புகளில் 11,231 பேர் பயனடையும் வகையில் 99 லட்சத்து 72 ஆயிரம்
ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டர் வீதம்
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கூட்டுக் குடிநீர்த் திட்டம்;
கன்னியாகுமரி மாவட்டத்தில், 1,86,347 பேர் பயனடையும் வகையில் 16 கோடியே
70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 40
லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் மேல்புரம்
ஒன்றியத்தைச் சேர்ந்த 79 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம்
மற்றும் களியக்காவிளை, கொல்லங்கோடு, மேல்புரம் ஆகிய மூன்று கூட்டுக்
குடிநீர்த் திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம்;
என மொத்தம் 21 கோடியே 47 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில்
அமைக்கப்பட்டுள்ள குடிநீர்த் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி
வைத்து, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மூன்று கூட்டுக் குடிநீர்த்
திட்டங்களுக்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம்,
நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி,
தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்
வழங்கல் துறைச் செயலாளர் கே. பணீந்திர ரெட்டி, நகராட்சி நிர்வாக ஆணையர்
சந்திரகாந்த் பி. காம்ப்ளே, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின்
நிர்வாக இயக்குநர் சி. விஜயராஜ்குமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள்
கலந்து கொண்டனர்.
இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.