தினமலர் 25.05.2010
பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு திட்டம் 6ம் தேதி முதல் மாநகராட்சி துவங்குகிறது
சென்னை : “சென்னை நகரில் சாலைகளில் திரிந்த, மனநோயாளிகளுக்கு மறுவாழ்வு கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டது போல், வரும் 6ம் தேதி முதல் கைக்குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை பிடித்து, மறுவாழ்வு கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‘ என்று மேயர் சுப்ரமணியன் கூறினார்.நகரில் கைக்குழந்தைகளை வைத்து கொண்டு சாலைகளிலும், சிக்கனலிலும் பிச்சை எடுப்பதை தடுக்க மேயர் சுப்ரமணியன், கமிஷனர் ராஜேஷ் லக்கானி நேற்று ரிப்பன் கட்டடத்தில், தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினர்.இதில் சமூக நலத்துறை அதிகாரி மற்றும் 30க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.அதை தொடர்ந்து, மேயர் சுப்ரமணியன் கூறியதாவது:கடந்த மூன்றரை ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி, சமூக பிரச்னைகளிலும், அக்கறை கொண்டு செயல்படுகிறது. குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், சாலை ஓரங்களில் திரிந்த சிறுவர்களை பாதுகாக்கவும், நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.முதியோருக்கும் மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. போதை பொருளுக்கு அடிமையானவர் களுக்கு, மறுவாழ்வு கொடுக்க தனிசிகிச்சை மையம் அமைக்கப்படவுள்ளது.சாலைகளில் மனநலம் பாதிக்கப் பட்டவர்களுக்கு, மறுவாழ்வு அளிக்க சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நகரில் தற்போது சாலைகளில், சிக்னல் மற்றும் சாலை ஓரங்களில் கைக்குழந்தைகளை வைத்து, பிச்சை எடுப்பது அதிக அளவில் உள்ளது.சமூக நலத்துறை ஒத்துழைப் புடன், இதுபோல் பிச்சை எடுப்பவர் களை பிடித்து குழந்தைகளை குழந்தை களுக்கான இல்லத்திலும், பெண் களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் வகையில், பாதுகாப்பு மையங் களிலும் சேர்க்கப்படுவர்.இந்த திட்டத்திற்கு, வந்துள்ள தொண்டு நிறுவனங்கள், முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதி அளித்துள்ளன.இதனால் வரும் 5ம் தேதி வரை பிச்சைக்காரர்களுக்கு கெடு கொடுத்து, 6ம் தேதி முதல் தொண்டு நிறுவனம் ஒத்துழைப்புடன், அந்தந்த மண்டல உதவி சுகாதார அதிகாரிகள், பிச்சைக் காரர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.6ம் தேதி முதல் அதிரடியாக 10ம் தேதி வரை பிச்சைக்காரர்கள் பிடிக்கப் பட்டு, குழந்தைகளை குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்திற்கும், பெண் களை பெண்கள் பாதுகாப்பு மையத் திற்கும், முதியோரை முதியோர் இல்லத்திற்கும், மனநலம் பாதிக்கப் பட்டவர்களை மனநல மருத்துவமனைக்கும் அனுப்பி வைப்போம்.இவ்வாறு மேயர் கூறினார்.