தினமணி 05.08.2010
கூவம் நதி சீரமைப்புப் பணி
6 ஆண்டுகளில் முடிவடையும்: ஸ்டாலின்
சென்னை
, ஆக.4: சென்னை கூவம் நதி சீரமைப்பு பணி 5 அல்லது 6 ஆண்டுகளில் முடிவடையும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னை மாநகராட்சி சார்பில் கூவம் நதி சீரமைப்பு திட்டத்தின் கீழ் புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் மற்றும் சிவானந்தா சாலையில் ரூ
.2.21 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு புதிய பூங்காக்களை புதன்கிழமை திறந்துவைத்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது:கூவம் நதியைச் சீரமைப்பது தொடர்பான சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனத்தினரின் அறிக்கை
5 அல்லது 6 மாதங்களில் கிடைக்கும். கூவம் நதி சீரமைப்புப் பணியின் மொத்த மதிப்பீடு ரூ.1,200 கோடியாகும். சிங்கப்பூர் நதியை சீரமைக்க 10 ஆண்டுகள் ஆனது.சென்னை கூவம் சீரமைக்கும் பணி
5, 6 ஆண்டுகளில் முடிக்கும் வகையில் பொதுப் பணித்துறையும் சென்னை மாநகராட்சியும், குடிசை மாற்று வாரியமும் இணைந்து முழுமையாக நிறைவேற்றும் புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 1,028 குடிசைகள் அப்புறப்படுத்தப்பட்டு ஒக்கியம் துரைப்பாக்கத்தில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அண்ணாசாலை அருகில் டாம்ஸ் ரோடு பகுதியில் உள்ள கூவம் கரை பகுதிகள் சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்பெறும் வகையில் மாற்றியமைக்கப்பட உள்ளன.1,200
ஆட்டோ உதிரிபாக சிறு தொழிற்சாலைகள் ஆப்பூருக்கு மறு குடியமர்வு:கூவம் ஆற்றை சீரமைக்கும் பணிகளின் ஒரு முக்கிய அங்கமாக சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை பகுதிகளில் உள்ள கூவம் கரையை ஆக்கிரமித்து ஆட்டோ மற்றும் மோட்டார் உதிரி பாகங்களின் சிறுதொழிற்சாலைகள் உள்ளன.சிறு தொழிற்சாலை உரிமையாளர்களிடம் சுமூகமான பேச்சு வார்த்தை நடத்தி
, 1,200 சிறு தொழிற்சாலைகளுக்கு மாற்று இடம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அருகிலுள்ள ஆப்பூர் கிராமத்திற்கு மறு குடியமர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன
. இதற்கான முதல் கட்ட பணிகள் ஓரிரு ஆண்டுகளில் முடிக்கப்படும்.சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை
: கூவம் ஆற்றை முதலிலும், அதைத்தொடர்ந்து சென்னை நகரின் பிற முக்கிய நீர்வழித் தடங்களையும் சேர்த்து சீரமைக்கும் நோக்கத்துடன் தற்போதுள்ள அடையாறு பூங்கா அறக்கட்டளை, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை என 2010 ஜனவரி 22-ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது.இந்த அறக்கட்டளையின் முதலாவது கூட்டம்
2010 பிப்ரவரி 8-ம் தேதி நடைபெற்றது. இந்த அறக்கட்டளையின் மூலம் கூவம் நதியைச் சீரமைக்க, சிங்கப்பூரைச் சேர்ந்த சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனத்துடன் 2010 மார்ச் 18-ம் தேதி முதல்வர் கருணாநிதி முன்னிலையில் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளைக்கும், சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி
,மேயர் மா.சுப்பிரமணியன், நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் க.அசோக்வர்தன் ஷெட்டி,பொதுப் பணித்துறை முதன்மை செயலாளர் ராமசுந்தரம், துணை முதல்வரின் முதன்மைச் செயலாளர் கே. தீனபந்து, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர் செயலாளர் க.பனீந்திர ரெட்டி,சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.