தினமலர் 26.11.2010
ரூ.6 கோடியில் ரோடு விரிவாக்கம்பல்லடம்
: பல்லடத்தில் ரூ.6 கோடி மதிப்பில் மங்கலம் ரோடு, பொள்ளாச்சி ரோடு விரிவாக்கம் செய்யும் பணி துவங்கியுள்ளது. பல்லடத்தில் இருந்து மங்கலம் செல்லும் ரோடு மிகவும் குறுகலாக இருந் தது. இந்த ரோட்டில் அடிக் கடி போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்பட்டு வந் தது. மங்கலம் ரோட்டை விரிவாக்கம் செய்ய வேண் டும் என அமைச்சர் சாமிநாதனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது பல்லடத்தில் இருந்து மங்கலம் ரோட்டில் எட்டாவது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேலம்பாளையம் பிரிவு வரை, ஐந்தரை மீட்டரில் இருந்து ஏழு மீட்டராக விரிவுபடுத்தும் பணி நான்கு கோடி ரூபாய் மதிப்பில் நெடுஞ்சாலைத்துறையால் துவக்கப்பட்டுள்ளது. விரிவுபடுத்தப்படும் பணிக்கு தனியார்களிடம் இருந்து கையகப்படுத்தப்படும் இடங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு நெடுஞ்சாலைத்துறையினர் விபரங்கள் அனுப்பி உள்ளனர். இதேபோல், பல்லடம் – பொள்ளாச்சி மெயின் ரோட்டில் கதர் கடையில் இருந்து உடுமலை ரோடு சந்திப்பு வரையிலான 1.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோடு அகலப்படுத்தும் பணியும் துவங்கியுள்ளது.7 மீட்டர் ரோடு 15 மீட்டர் கொண்ட ரோடாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. ரூ. இரண்டு கோடியில் நடக்கும் இப்பணி நிறைவு பெற்றவுடன் சென்டர் மீடியன் அமைக்கப்படுகிறது. மங்கலம்ரோடு, பொள் ளாச்சிரோடு விரிவாக்கப்பணிகள் நிறைவு பெற்றால் பல்லடம் பகுதியில் போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் சற்று குறையும் வாய்ப்பு ஏற்படும்.