தினமணி 06.09.2012
காயல்பட்டினத்தில் ஆய்வு: 6 மின்மோட்டார்கள் பறிமுதல்
ஆறுமுகனேரி, செப். 5: காயல்பட்டினம் நகராட்சிப் பகுதிகளில், குடிநீர் இணைப்புகளில் பொருத்தப்பட்டதாக 6 மின்மோட்டார்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
காயல்பட்டினம் நகர்மன்றம் சார்பில், குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவதை பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ளுமாறு எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், நகராட்சி ஆணையர் அஷோக் குமார், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், குடிநீர் விநியோகக் குழாய் பொருத்துநர் நிஸôர் உள்ளிட்டோர் புதன்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, காயல்பட்டினம் மேலப்பள்ளி தெருவில் விதிமீறி பொருத்தப்பட்டிருந்த 4 மின்மோட்டார்களும், பெரிய நெசவுத் தெருவில் 2 மின்மோட்டார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.