தினமணி 09.11.200
ரூ. 60 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
ஸ்ரீவைகுண்டம், நவ. 8: ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிப் உள்பட்ட பகுதிகளில் ரூ. 60 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என, சுடலையாண்டி எம்எல்ஏ தெரிவித்தார்.
ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகளை அவர் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தாமிரபரணி ஆற்றின் தென் பகுதியில் ரூ. 60 லட்சத்தில் குறைந்தபட்ச சேவைத் திட்டத்தின்கீழ் சுகாதாரமான குடிநீர் வழங்க அரசுக்கு பரிந்துரைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சித் தலைவர் கந்தசிவசுப்பு, மாவட்ட காங்கிரஸ் செயலர் ராஜவேல், துணைத் தலைவர் சற்குரு, நகர காங்கிரஸ் தலைவர் சேதுபாண்டியன், வட்டார காங்கிரஸ் செயலர் சீனி ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பிச்சையா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.