தினகரன் 11.04.2013
மாநகரில் இன்று 61 முதல் 65 வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் ரத்து
திருச்சி: திருச்சி மாநகராட்சி ஆணை யர் தண்டபாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி ஓடத்துறை ரயில்வே மேம்பால பணிகள் தற்போது நடந்து வருகிறது. கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் பிரதான உந்துக்குழாய்கள் இப்பாலத்தின் கீழ் செல்கிறது. இக்குழாயின் மூலம் மாநகராட்சி 61 முதல் 65ம் வார்டுகளுக்கான குடிநீர் வினியோகிக்கப் படுகிறது. ரயில்வே மேம்பால பணிக்காக இக்குடிநீர் குழாயை மாற்றி அமைக்கும் பணி இன்று (11ம் தேதி) நடக்கிறது. வரும் 12ம் தேதி முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.